ஏன் இப்படி பண்றீங்க… எங்களை ஏமாத்திட்டீங்களே… கோலி மீது அதிருப்தியில் ரசிகர்கள்!!

0
16

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 10 விக்கெட் இழப்பிற்கு 242 ரன்களில் சுருண்டு போனது.

முதல் டெஸ்ட் போட்டியில் அடைந்த தோல்வியில் இருந்து இந்திய அணி மீண்டு எழ முடியாமல் தவித்தது.

அடுத்து முதல் இன்னிங்க்ஸினை துவக்கிய நியூசிலாந்து அணி  ரன் வேட்டை நடத்த இறுதியில், நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 235 ரன்னில் ஆல் அவுட்டானது.

ஏன் இப்படி பண்றீங்க… எங்களை ஏமாத்திட்டீங்களே… கோலி மீது அதிருப்தியில் ரசிகர்கள்!!

அடுத்து இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சைத் துவக்கியது. இந்திய அணியினைப் துவக்க வீரர்களாக பிரித்வி ஷா, அகர்வால் ஆகியோர் களமிறங்கி ஆடிய நிலையில், 3 ரன்கள் எடுத்தநிலையில் அகர்வால் அவுட் ஆகினார்.

அடுத்து புஜாரா களம் இறங்க, பிரித்வி ஷா – புஜாரா ஜோடி அதிக அளவில் ரன்களைக் குவித்தது. பிரித்வி ஷா 14 ரன்களுக்கு அவுட் ஆகி அதிர்ச்சி அளிக்க, நம்பிக்கை நட்சத்திரமாக கேப்டன் கோலி களமிறங்கினார்.

கோலி சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினால், இந்திய அணியின் ரன் ரேட் அதிகமாகும் என எதிர்பார்த்து ரசிகர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றமே ஆகும், அவர் 14 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

இதனால் ரசிகர்கள் கடுப்பாகிப் போயினர், ஆக்ரோஷமான ஆட்டத்தினை விடுத்து, நிதானமாக ஆடி இருக்கலாமே என்று புலம்பி வருகின்றனர்.