இலங்கையில்முதன்முறையாக! பிரமாண்டமாகஉருவாகும்செயற்கைகடற்கரை!!

0
2

கொழும்பு துறைமுக நகரத்தில் பிரமாண்டமான செயற்கை கடற்கரையுடனான பொதுமக்கள் கூடும் பகுதி ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது.

இதன் மூலம் பொதுமக்கள் கொழும்பு துறைமுக நகரத்தின் முதலாவது பொழுது போக்கு அம்சத்தை பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய காலி முகத்திடலில் இருந்து, செயற்கை கடற்கரை பகுதிக்கு பொதுமக்கள் ஒற்றையடி பாதை பாலம் ஒன்றின் ஊடாக செல்ல முடியும்.

நிர்மாணிக்கப்படும் செயற்கை கடற்கரை பிரதேசம் 1.5 கிலோ மீட்டர் நீளத்தையும் 50 மீட்டர் அகலத்தையும் கொண்ட பிரதேசமாக அமையும் என கொழும்பு துறைமுக நகர திட்ட சுற்றாடல் முகாமைத்துவ திட்டத்தின் தலைவர் டபிள்யூ.ஏ.டி.டி. விஜயசூரிய தெரிவித்துள்ளார்.

கடல்நீர் தடுப்பு சுவர் அமைந்துள்ளமையினால், இந்த பிரதேசம், நீராட செல்பவர்களுக்கு சிறந்த சுற்றுலா தளமாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், விஹாரமகா தேவி பூங்காவிற்கு இணையான பூங்காவொன்றும் அமையவுள்ளது.

இந்த பூங்கா தற்போதைய காலி முகத்திடலை விட ஐந்து மடங்கு விஸ்தீரணத்தைக் கொண்டிருக்கும், என்பதுடன் இந்த பூங்காவிற்கு செல்ல பொது மக்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படும் எனவும் கொழும்புத் துறைமுக நகர திட்ட சுற்றாடல் முகாமைத்துவ திட்டத்தின் தலைவர் டபிள்யூ.ஏ.டி.டி. விஜயசூரிய தெரிவித்துள்ளார்