கோலிதான் வேணும்.. அடம்பிடிக்கும் வங்கதேச கிரிக்கெட் போர்டு!!

0
6

வங்காளதேசத்தில் ஷேக் முஜுபுர் ரஹ்மானின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் வங்காளதேசம் ஆசிய லெவன் மற்றும் உலக லெவன் அணிகளுக்கு இடையே இரண்டு டி20 போட்டிகளை நடத்த வங்கதேசம் திட்டமிட்டுள்ளது. மேலும் இந்தப் போட்டியானது டாக்கா மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்தப் போட்டியானது மார்ச் 18 ஆம் தேதி துவங்கி 22 ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு நடைபெற உள்ளது.

ஆசிய லெவன் அணியில் விராட் கோலி விளையாட வேண்டும் என்று வங்கதேச கிரிக்கெட் போர்டு இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை வைத்துள்ளது.

கோலிதான் வேணும்.. அடம்பிடிக்கும் வங்கதேச கிரிக்கெட் போர்டு!!

நான்கில் இருந்து ஐந்து வீரர்களை அனுப்புவதாகவும், ஆனால் அந்த வீரர்கள் குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறி இருந்தார்.

அதாவது பிசிசிஐ தலைவர் கங்குலி கூறியதாவது, ‘‘நாங்கள் நான்கு வீரர்களை அனுப்ப முடிவு செய்துள்ளோம், ஆனால் எந்த வீரரை அனுப்புவது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை. நிச்சயம் நான்கு முதல் ஐந்து வீரர்களை அனுப்புவோம்’’ என்று கூறியுள்ளார்.

இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட தொடர் 18 ஆம் தேதி முடிவதால், கோலி பங்கேற்க மாட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன