ஒரு இலட்சம் பேருக்கு தொழில் வாய்ப்புக்கான நேர்முகத்தேர்வுகள்……

0
13

அரசாங்கத்தின், குறைந்த வருமானம் மற்றும் கல்வி மட்டம் கல்வி மட்டம் குறைந்த ஒரு இலட்சம் பேருக்கு தொழில் வாய்ப்புக்கான நேர்முகத்தேர்வுகள் வவுனியா பிரதேச செயலகத்தில் எதிர்வரும் புதன்கிழமை முதல் இடம்பெறவுள்ளது.

வவுனியா பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட 3100 விண்ணப்பதாரிகளுக்கே இவ்வாறு நேர்முகத்தேர்வுகள் இடம்பெறவுள்ள நிலையில் கடிதங்கள் கிராம சேவகர் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் புதன்கிழமை 26 ஆம் திகதியில் இருந்து சனிக்கிழமை 29 ஆம் திகதி வரை குறித்த நேர்முகத்தேர்வுகள் இடம்பெறவுள்ளது. நேர்முகத்தேர்வுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் கடிதங்களை அந்தந்த கிராம கிராம சேவகர்களிடம் பெற்று நற்சான்றிதழ் பத்திரத்துடன் கடித்தினையும் நேர்முகத்தேர்வுக்கு கொண்டு வருமாறு பிரதேச செயலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராம சேவகர் பிரிவாக நேர்முகத்தேர்வுகள் இடம்பெறவுள்ளதால் விண்ணப்பங்களை அனுப்பியவர்கள் கிராம சேவகர்களை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், நேர்முகத்தேர்வுகள் இடம்பெறும் கிராமத்தை சேர்ந்த கிராம சேவகர்கள் அன்றைய தினம் பிரதேச செயலகங்களிலேயே கடமையில் ஈடுபடுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.