அதிவேக நெடுஞ்சாலையில் இன்று முதல் பஸ் சேவை

0
4

அதிவேக நெடுஞ்சாலையில் இன்று முதல் (25) ஹம்பாந்தோட்டையில் இருந்து கொழும்பு – கோட்டை வரையிலான பஸ் சேவை ஆரம்பமாகவுள்ளது.

அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலைமையில், பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ ஆரம்ப நிகழ்வுகள் தங்காலை பஸ் நிலையத்தில் இடம்பெறவுள்ளன.

அப்பகுதியூடான பஸ் கட்டணங்களாக  ஹம்பாந்தோட்டையில் இருந்து கோட்டை வரை 880 ரூபா அறவிடப்படவுள்ளது.

தங்காலையில் இருந்து கோட்டை வரையிலான பஸ் கட்டணம் 680 ரூபாவாகும்.

ஹம்பாந்தோட்டையில் இருந்து மாக்கும்புர வரையான பஸ் கட்டணமாக 810 ரூபா அறவிடப்படவுள்ளதுடன், தங்காலையில் இருந்து மாக்கும்புர 610 ரூபா அறவிடப்படவுள்ளது.

கடந்த 23ம் திகதி திறக்கப்பட்ட மாத்தறை – ஹம்பாந்தோட்டை நெடுஞ்சாலையில் புதிதாக 10 சொகுசு பஸ்கள் சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்திருந்தது.

இந்த பஸ்கள் மாத்தறை – ஹம்பாந்தோட்டை அதிவேக நெடுஞ்சாலையில் இருந்து, கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் கடவத்தை வரையில் சேவையில் ஈடுபடவுள்ளன.

இந்த பஸ் சேவை அம்பலாந்தோட்டை , தங்காலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய இடங்களில் இருந்து ஆரம்பமாகவுள்ளது.