இராஜினாமா செய்தார் டு பிளிஸ்சிஸ்

0
7

தென்ஆபிரிக்க அணியின் டெஸ்ட் மற்றும் ரி 20 கிரிக்கெட் தலைவர் பதவியை இராஜினாமா செய்தார் டு பிளிஸ்சிஸ்.

தென்ஆபிரிக்க கிரிக்கெட் அணியின் தலைவராக இருந்தவர் டு பிளிஸ்சிஸ். 50 ஓவர் உலக கிண்ண தொடரில் மோசமான தோல்வியை சந்தித்ததால் ஒருநாள் போட்டிக்கான தலைவர் பதவியை இராஜினாமா செய்தார்.

அதன்பின் இங்கிலாந்துக்கு எதிராக நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிய தென்ஆபிரிக்கா சொந்த மண்ணில் 1-3 எனத் தொடரை இழந்தது. ரி 20 தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டது. நேற்றுமுன்தினம் முடிவடைந்த ரி 20 தொடரை தென்ஆபிரிக்க 1-2 இழந்தது.

இந்நிலையில் டெஸ்ட் மற்றும் ரி 20 அணிக்கான தலைவர் பதவியை டு பிளிஸ்சிஸ் இராஜினாமா செய்துள்ளார். தென்ஆபிரிக்க ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு குயிண்டன் டி கொக் நிரந்தர தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து தொடரின்போது ரி 20 அணிக்கு தலைவராக செயல்பட்டார். இதனால் டி கொக் மூன்று வகை கிரிக்கெட் அணிக்கும் தலைவராக நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது.