பழி தீர்த்த நியூசிலாந்து

0
16

இந்தியாவுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3:0 என 30 ஆண்டுகளுக்குப் பின்னர் வெள்ளையடிப்பு செய்துள்ளது நியூசிலாந்து அணி.

ஏற்கனவே 2:0 என்ற அடிப்படையில் நியூசிலாந்து அணி தொடரில் முன்னிலை பெற்றிருந்த நிலையில் இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை 3:0 என முழுமையாக வெற்றிபெற்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடி இந்தியா நிர்ணயித்த 297 எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 47.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 300 ஓட்டங்களை பெற்று 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

நியூசிலாந்து அணி சார்பில் மாட்டீன் குப்தில் 66, நிக்கொலஸ் 80 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்திருந்தனர். தொடர்ந்து வந்த லதொம் மற்றும் கிராண்ட்கோம் ஆகியோர் ஆட்டமிழக்காது வெற்றி இலக்கை நோக்கி அணியை இட்டுச்சென்றிருந்தனர்.

அந்த வகையில் லதொம் 32 ஓட்டங்களையும் கிராண்ட்கோம் 28 பந்துகளை மட்டும் எதிர்கொண்டு மூன்று 6 ஓட்டங்கள் ஆறு 4 ஓட்டங்களை விளாசி 58 ஓட்டங்களை பெற்று வெற்றிக்கு வித்திட்டனர்.

பந்துவீச்சில் சாஹல் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

இப்போட்டியின் ஆட்ட நாயகனாக நியூசிலாந்தின் ஹென்ரி நிக்கொலசும், தொடர் நாயகனாக ரோஸ் ரெய்லரும் தேர்வு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா 5-0 எனக் கைப்பற்றியிருந்தது. தற்போது அதற்கு பழி தீர்த்துள்ளது நியூசிலாந்து.