உயரம் தாண்டுதல் போட்டியில் புதிய சாதனை!

0
5

சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஆர்லென் கோப்பர்நிகெஸ் உயரம் தாண்டுதல் போட்டியில் புதிய உலக சாதனையொன்றை பதிவுசெய்துள்ளார்.

போலந்து நாட்டின் டுரன் நகரில் ஆர்லென் கோப்பர்நிகெஸ் கிண்ணத்துக்கான உயரம் தாண்டுதல் போட்டி நடந்தது.  

இதில் கலந்து கொண்ட ஆர்மண்ட் டியூபிளாண்டிஸ், 6.17 மீட்டர் வரை உயரம் தாண்டி புதிய உலக சாதனை படைத்து உள்ளார்.   டியூபிளாண்டிஸ் தனது 2 ஆவது முயற்சியில் இந்த உயரத்திற்கு சென்று சாதனை செய்துள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டில் பிரான்சு நாட்டை சேர்ந்த ரெனாட் லாவில்லேனி என்பவர், டியூபிளாண்டிஸ் செய்த சாதனையை விட ஒரு சென்றி மீட்டர் குறைவாக தாண்டி இருந்ததே இதுவரை சாதனையாக இருந்தது.

இந் நிலையில் அந்த சாதனையானது தற்போத தகர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.