உயிர்க்கொல்லிப் புற்றுநோய்

0
8

பெப்பிரவரி 4ஆம் நாள் உலக புற்றுநோய் நாளாகும். இந்நாளை முன்னிட்டு புற்றுநோயின் தாக்கம் குறித்து சற்றுப் பார்ப்போம். தமிழ் மக்களிடையே குறிப்பாக புலம்பெயர் தமிழர்களிடையே வயது வேறுபாடின்றி அதிகமானோர் புற்று நோய்த் தாக்கத்திற்கு உள்ளாவது இன்று துன்பியல் நிகழ்வாகியுள்ளது. 2018 இல் மட்டும் 17 மில்லியன் மக்கள் அதாவது ஒரு கோடி 70 லட்சம் மக்கள் உலகெங்கும் புதிதாக புற்று நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகியிருப்பது ;கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் 8.8 மில்லியன் அதாவது 88 லட்சம் பேர் ஆண்களும், 8.2 மில்லியன் அதாவது 82 லட்சம் பேர் பெண்களுமாகும். இங்கு பல வளர்முக நாடுகளில் இவ்வாறு அடையாளம் காண்பதற்கான வசதிகளே இல்லை என்பதையும் கவனத்தில் கொண்டாக வேண்டும். புற்று நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகியிருந்தோரில் 9.6 மில்லியன் 96 லட்சம் பேர் 2018 உயிரிழந்தும் உள்ளனர். அதாவது உலகில் மரணத்திற்கான இரண்டாவது முக்கிய காரணியாக புற்றுநோய் அடையாளம் காணப்பட்டுள்ளது.

புற்றுநோய்களில் 33 சதவீதமானவை புகைத்தலுடன் சம்பந்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே புற்றுநோய்களிலேயே அதிகமானது நுரையீரலுடன் சம்பந்தப்பட்டுள்ளமை புலப்படும். அத்துடன் பெண்களின் மார்பகப் புற்றுநோய், குடல் புற்றுநோய் மற்றும் புறஸ்ரேட் புற்றுநோயும் அதிகரித்த எண்ணிக்கையில் காணப்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அதாவது மேற்க்கண்ட நான்கு புற்றுநோய்கள் மட்டும் புற்றுநோயத் தாக்கத்திற்கு உள்ளானோரில் 43 சதவீதமானோரில் தாக்கத்தை ஏற்ப்படுத்தியுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துச் செல்லும் எண்ணிக்கை 2040 இல் ஆண்டொன்றிற்கு புதிதாக புற்றுநோய்த் தாக்கத்திற்கு அடையாளம் காணப்படுவோரின் எண்ணிகையை 27.5 மில்லியனாக அதாவது 2 கோடியே 75 லட்சம் பேராக அதிகரித்துவிடும் எனவும் எச்சரிக்கின்றனர்.

இன்று உலகில் ஒரு பில்லியன் பேர் அதாவது 100 கொடி பேர் புகைபிடிக்கின்றனர். புதைபிடித்தலால் ஏற்படும் மரணங்களில் 33 சதவீத இறப்பு, அதனால் ஏற்படும் புற்றுநோய்களால் மட்டும் நிகழ்கிறது. இது முயன்றால் இலகுவாக தவிர்த்துவிடக்கூடிய ஒன்று. மது அருந்துதல் உலகில் 6 சதவீத மரணங்களுக்கு காரணமாக அமைகிறது. அதில் 8 இல் ஒருவர் அதனால் ஏற்படும் புற்றுநோயால் இறக்கின்றார். இது கூட முயன்றால் தவிர்த்துவிடக்கூடியது. அதிகரித்த எடை, உணவில் பழவகைகள், காய்கறிகளின் போதிய சேர்க்கையின்மை அல்லது தவிர்ப்பு, போதிய உடற்பயிற்ச்சியின்மை என்பனவும் புற்றுநோய்களிற்கும் அதனால் ஏற்படும் மரணங்களிற்கும் காரணமாக அமைந்துவிடுவதால் இவற்றிலும் சற்று அதிககவனம் செலுத்துவோமே..

2018இல் புற்றுநோய் கண்டுபிடிக்கப்பட்ட 17 மில்லியனர் பேரின் புற்றுநோய்களின் தாக்கம் வருமாறு

Lung (2.09 million cases)
Breast (2.09 million cases)
Colorectal (1.80 million cases)
Prostate (1.28 million cases)
Skin cancer (non-melanoma) (1.04 million cases)
Stomach (1.03 million cases)

2018 இல் மரணித்துப்போன 9.6 மில்லியன் பேரின் மரணத்திற்கு காரணமாக அமைந்து புற்றுநோய் வருமாறு

Lung (1.76 million deaths)
Colorectal (862 000 deaths)
Stomach (783 000 deaths)
Liver (782 000 deaths)
Breast (627 000 deaths)

வருடம் ஒன்றிற்கு 19 வயதிற்கு குறைந்த 3 லட்சம் சிறுவர்களும் புற்றுநோய்த் தாக்கத்திற்கு உள்ளாகிவருவது கண்டறியப்படுகிறது. இதில் வளர்ந்துவிட்ட நாடுகளில் 80 சதவீதமானோர் முற்றாக அதில் இருந்து குணமடையும் வாய்ப்பைக் கொண்டிருக்கின்றனர். ஆனால் சுகாதார வசதிகளை பெரிதும் கொண்டிராத வளர்முக நாடுகளில் வெறும் 20 சதவீதமான சிறுவர்களே ஈற்றில் காப்பாற்றப்படுகின்றனர். அதிககரித்துசச் செல்லும் எண்ணிக்கை ஆண்டொன்றிற்கு புற்றுநோய் மருத்துவத்திற்கான செவீனத்தை மட்டும் 1.5 ரில்லியன டொலர்களாக உலகளாவி அதிகரித்துள்ளது.

தொ குப்பு = நேரு குணரட்ணம்