கிளிநொச்சியில் மக்கள் முகாம்களில் தஞ்சம்

0
205

கிளிநொச்சியில் தொடர்ந்து பெய்து வருகின்ற கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு கிளிநொச்சியில் மக்கள் முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டம் பூராகவும் இன்று நான்கு மணி வரை வெள்ளத்தினால் 8440 குடும்பங்களைச் சேர்ந்த 27125 பேர் வெள்ளப் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர் அத்துடன் மாவட்டம் பூராக 31 முகாம்களில் 2610 குடும்பங்களைச் சேர்ந்த 2,176 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தர்மபுரம் கட்டைக்காடு கல்லாறு நாகேந்திரபுரம் ஆகிய முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் இன்று சந்தித்தார் நாடாளுமன்ற உறுப்பினர் மக்களை சந்திப்பதற்கு முன்பதாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் உடன் மக்களின் உடனடி தேவைகள் தொடர்பிலும் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பிலும் அவர்கள் மீள தங்கள் வீடுகளுக்கு செல்லுகின்ற போது அவர்களின் தேவைகள் தொடர்பிலும் கலந்துரையாடினார்.
நாடாளுமன்ற உறுப்பினருடன் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுரேன் சுப்பிரமணியம் கிடைத்த பிரதேச சபையின் உறுப்பினர் ஜீவராசா தமிழரசுக் கட்சி அமைப்பாளர்களான கரன் சிவேந்திரன் தமிழரசுக்கட்சியின் முன்னாள் மாவட்ட இளைஞரணி செயலாளர் சர்வா உபதேசங்களின் அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்