28 வருடங்களின் பின்னர் இலங்கை சாதனை

0
31

தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளின் மெய்வல்லுனர் போட்டிகளில் 28 வருடங்களின் பின்னர் இந்தியாவை பின் தள்ளி இலங்கை முதலிடத்தை பெற்றுள்ளது.

இன்றைய தினம் இலங்கை மெய்வல்லுனர் போட்டிகளில் 5 தங்கப்பதக்கங்கள் கைப்பற்றிய நிலையில், இந்த போட்டியில் இலங்கை பெற்ற மொத்த தங்கப்பதக்கங்களின் எண்ணிக்கை 15 ஆகும்.

எனினும், இந்தியா 13 தங்கப்பதக்கங்களை மாத்திரமே பெற்றுள்ளது.

இதனடிப்படையில், 28 வருடங்களின் பின்னர் இலங்கை தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளின் மெய்வல்லுனர் போட்டிகளில் இந்தியாவை பின் தள்ளி சாதனை படைத்துள்ளது.