35 வருடங்களின் பின்னர் பிரபஞ்ச பேரழகியாக தெரிவு

0
46

இலங்கையை சேர்ந்த பெண், திருமணமாணவர்களுக்கான பிரபஞ்ச பேரழகிப் போட்டியில் (Mrs. World 2020) பிரபஞ்ச பேரழகியாக முடி சூட்டப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்ற உலக ராணி 2020 போட்டியிலேயே கொழும்பைச் சேர்ந்த Caroline Jurie  பிரபஞ்ச அழகியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

35 வருடங்களின் பின்னர் இலங்கையை சேர்ந்த ஒருவர் இந்த பட்டத்தை வென்ற முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

1984ஆம் ஆண்டு இடம்பெற்ற உலக அழகிப் போட்டியில் கலந்து கொண்ட தற்போதைய கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க இலங்கை சார்பில் அழகியாக வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.