இஸ்லாமியப் போதகர் அஞ்செம் சவுத்ரியுடன் உஸ்மான் கான் : படம் வெளியாகியுள்ளது

0
51

லண்டன் பிரிட்ஜில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதி உஸ்மான் கான் இஸ்லாமிய அடிப்படைவாதப் போதகர் அஞ்செம் சவுத்ரியுடன் காணப்பட்ட படம் ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

இந்தப் படம் மார்ச் 2009 இல் எடுக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.

தடைசெய்யப்பட்ட தீவிரவாதக் குழு ஒன்று ஏற்பாடு செய்த ஷரியா சட்டம் குறித்த மாநாட்டின் போது இந்தப்படம் எடுக்கப்பட்டது என்று கருதப்படுகின்றது.

லண்டன் பங்குச் சந்தையைத் தாக்கச் சதி செய்ததற்காக 2012 இல் தண்டனை பெற்ற ஒன்பது தீவிரவாதிகளில் ஒருவரான பயங்கரவாதி உஸ்மான் கான் ஸ்ரோக்-ஒன்-ட்ரெண்டில் (Stoke-on-Trent) கைது செய்யப்பட்டிருந்தார்.

மேலும் அல் முஹாஜிரோன் நடத்திய தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களிலும் உஸ்மான் கான் கலந்து கொண்டதாக அறியப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை, கைதி மறுவாழ்வு குறித்த நிகழ்வு லண்டன் ஃபிஷ் மொங்கர் மண்டபத்தில் நடந்தபோது பயங்கரவாதி உஸ்மான் கானால் ஜக் மெரிற் மற்றும் சஸ்கியா ஜோன்ஸ் ஆகியோர் குத்திக் கொல்லப்பட்டனர். அத்துடன் மேலும் மூவர் காயமடைந்தனர்.

சம்பவம் நடந்த அன்று இரண்டு கத்திகள் மற்றும் போலி தற்கொலைத் தாக்குதல் அங்கி வைத்திருந்த உஸ்மான் கான் ஆயுதம்தாங்கிய பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.