பிரிட்டனுக்குள் கள்ளமாக நுழையவிருந்த 25 பேர் கொள்கலனில் இருந்து மீட்பு!

0
38
நெதர்லந்திலிருந்து புறப்பட்ட சரக்குக் கப்பலிலிருந்து பிரிட்டனுக்குள் கள்ளத்தனமாக நுழைய கொள்கலனில் இருந்த 25 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

குளிரூட்டப்பட்ட கொள்கலனில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் பிரிட்டனுக்குச் செல்லவிருந்த அந்தச் சரக்குக் கப்பல் டச்சு துறைமுகத்திற்குத் திரும்பியதாகவும் அவசரச் சேவைப் பிரிவு தெரிவித்தது.

அவர்களுள் இருவர், அதிகக் குளிரால் பாதிக்கப்பட்டதன் காரணமாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு மேலதிக சிகிச்சை கொடுப்படுவதகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம், பாரவூர்தி ஒன்றிலிருந்த குளிரூட்டப்பட்ட கொள்கலனிலிருந்து 39 வியட்நாமியர்கள் பலியாகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டமை குரிப்பிடத்தக்கது.