மெக்ஸிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

0
54

மெக்ஸிகோவின், சுசியேட் பிராந்தியத்திற்கு மேற்கே 120 கிலோ மீட்டர் தொலைவில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கமானது 26.1 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதுடன் இதனால் உண்டான சொத்து சேதங்களும், உயர் சேதங்களும் இதுவரை வெளிவரவில்லை.

எனினும் இந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.