பதவி விலகினார் அமைச்சர் ஹரின் பெர்னான்டோ

0
58

சிறிலங்கா அதிபர் தேர்தலில் சஜித் பிரேமதாச தோல்வியடைந்ததை அடுத்து, விளையாட்டு,தொலைத்தொடர்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக ஹரின் பெர்னான்டோ அறிவித்துள்ளார்.

மக்களின் ஆணைக்கு மதிப்பளித்து தாம் அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக அவர் சற்று முன்னர் அறிவித்துள்ளார்.

அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியில் வகிக்கும் பதவிகளில் இருந்தும் விலகிக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாசவை அதிபர் வேட்பாளராக நிறுத்துவதில் ஹரின் பெர்னான்டோ முழு மூச்சுடன் செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சஜித் பிரேமதாச கட்சியின் பிரதித் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ள நிலையில், மேலும் பலர் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருந்து விலகுவர் என்றும் கூறப்படுகிறது.