நாளை அனுராதபுரவில் பதவியேற்கிறார் கோத்தா

0
50

சிறிலங்காவின் புதிய  அதிபராக  கோத்தாபய ராஜபக்ச நாளை அனுராதபுரவில் பதவியேற்றுக் கொள்ளவுள்ளார் என்று, வண. உடுவே தம்மாலோக தேரர் தெரிவித்துள்ளார்.

அனுராதபுர  ருவன்வெலி மகா தூபி முன்பாக, கோத்தாபய ராஜபக்ச புதிய அதிபராக நாளை காலை பதவியேற்கவுள்ளார் என, முகநூல் பதிவு ஒன்றில் கூறியுள்ளார்.

அதேவேளை, தேர்தல் முடிவுகள் இன்று மாலைக்குள் அறிவிக்கப்பட்டு விடும் என்றும், இன்று மாலையே புதிய அதிபர் பதவியேற்கலாம் என்றும் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.