வடக்கில் சரிந்தது ராஜபக்சவினர் செல்வாக்கு

0
60

வடக்கில் ராஜபக்சவினரின் செல்வாக்கு பெரும் சரிவைச் சந்தித்திருப்பதை, தற்போது வெளியாகியுள்ள இரண்டு தேர்தல் முடிவுகளில் இருந்து தெரியவந்துள்ளது.

2015இல்  நல்லூர் தொகுதியில் மகிந்த ராஜபக்சவுக்கு, 5,405 வாக்குகள் கிடைத்திருந்த போதும், இம்முறை கோத்தாபய ராஜபக்சவுக்கு,1,836 வாக்குகள் மாத்திரமே கிடைத்துள்ளன.

வன்னி மாவட்ட அஞ்சல் மூல வாக்குகளில், 2015இல் மகிந்த ராஜபக்சவுக்கு  2,940 வாக்குகள் கிடைத்திருந்தன. எனினும்இம்முறை கோத்தாபய ராஜபக்சவுக்கு 1,703 வாக்குகள் மாத்திரமே கிடைத்துள்ளன.

அதேவேளை, 2015 தேர்தலில் மைத்திரிபால சிறிசேன இந்த இரண்டு தொகுதிகளிலும் பெற்றிருந்த வாக்குகளை விட சஜித் பிரேமதாசவுக்கு அதிகளவு வாக்குகள் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.