கோத்தபாயவின் மேடையில் ராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க

0
50

ராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கி, அவரது அணியுடன் இணைந்துக்கொண்டுள்ளார்.

பொலன்நறுவை மன்னம்பிட்டி பிரதேசத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துக்கொண்ட வசந்த சேனாநாயக்க, கோத்தபாய ராஜபக்சவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளார்.

அவருடன் ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கத்தவர்கள் சிலரும் பொதுஜன பெரமுனவுடன் இணைந்துள்ளனர்.

வசந்த சேனாநாயக்க, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடாகவே முதலில் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார் என்பது அந்த வாய்ப்பை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே அவருக்கு வழங்கியிருந்தார்.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் மகிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்ட போது, வசந்த சேனாநாயக்க அவரது அமைச்சரவை அமைச்சராக பதவியேற்றார். பின்னர் ஜனநாயகத்திற்கான போராட்டத்தில் ஈடுபட போவதாக கூறி, ஐக்கிய தேசியக்கட்சியில் இணைந்து செயற்பட்டார்.