பலத்த பாதுகாப்புடன் யாழில் மக்கள் மத்தியில் சஜித்

0
58

ஐனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக வடகிழக்கு மாகாணங்களுக்கு சூறாவளி பயணம் மேற்கொண்டிருந்த ஜக்கிய தேசிய முன்னணியின் ஐனாதிபதி வேட்பாளர் சஜித் பிறேமதாஸ யாழ்.நல்லூர்- சங்கிலியன் பூங்கா வளாகத்தில் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இன்று மாலை நல்லூர்- சங்கிலியன் பூங்கா வளாகத்தில் இடம்பெற்ற இந்த பிரச்சார கூட்டத்தில் ஐனாதிபதி வேட்பாளர் சஜித் பிறேமதாஸ மற்றும் அமைச்சர்களான சரத் பொன்சேகா, மனோ கணேசன், றவூவ் ஹக்கீம், திருமதி விஜயகலா மகேஸ்வரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.