விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இதுவே உண்மை! பசில் ராஜபக்ச பொது மேடையில் தகவல்

0
68

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச பெறும் வெற்றியின் மிகப் பெரிய கௌரவம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கே கிடைக்க வேண்டும் என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தெஹிவளையில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.

இரண்டு கட்சிகளும் இணையாவிட்டால், இரண்டு தரப்பும் அழிந்து விடும். கடந்த ஐந்து ஆண்டுகள் தொடர்பாக புத்தகம் ஒன்றை எழுதினால், நோபல் பரிசு கிடைக்கும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் செய்யும் தியாகம் , நாட்டின் வெற்றிக்கும் சௌபாக்கியத்திற்கும் காரணமாக அமையும்.

வெற்றியின் அதிகமான கௌரவம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினருக்கு கிடைக்கும். இதனை பொதுஜன பெரமுனவினர் விரும்ப மாட்டார்கள். எனினும் அதுவே உண்மை எனவும் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.