சிவாஜிலிங்கத்தை களமிறக்கியது பசில்? அவருக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு இதுதான்?

0
49
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஸவே களமிறக்கியுள்ளதாக பிரபல சிங்கள இணையத்தளமான த லீடர் தெரிவிக்கின்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு எதிராக பாரிய குற்றச்சாட்டுக்களை முன்வைத்து உரை நிகழ்த்துமாறு பஷில் ராஜபக்ஸ, எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு பொறுப்பு வழங்கியுள்ளதாகவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு சிவாஜிலிங்கம், கோட்டாபய ராஜபக்ஸவிற்கு எதிராக கருத்துக்களை வெளியிடும் போது, சிங்கள வாக்குகளை பெற்றுக் கொள்ள இலகுவாக இருக்கும் என்ற எண்ணத்துடனேயே இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

சிவாஜிலிங்கம் 50000 தமிழ் வாக்குகளை பெற்றுக் கொள்வார் என பஷில் ராஜபக்ஸ கணிப்பிட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பிலான அனைத்து பொறுப்புக்களும், மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் உறுப்பினர் சிரிபால அமரசிங்கவிற்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பஷில் ராஜபக்ஸவின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண இணைப்பாளராக சிரிபால அமரசிங்க செயற்படுவதுடன், அவரும் இந்த முறை தேர்தலில் களமிறங்கியுள்ளார்.

2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது, வடக்கு கிழக்கு பகுதிகள் தேர்தலை புறக்கணிக்க செய்து, மஹிந்த ராஜபக்ஸவை வெற்றி பாதைக்கு கொண்டு வர பஷில் ராஜபக்ஸவே நடவடிக்கை எடுத்திருந்ததாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

    கடந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட்டதும் குறிப்பிடத்தக்கது