சரத் பொன்சேகாவின் பின்னர் என்னையும் கைது செய்ய முயன்றதால் வெளிநாட்டுக்கு சென்றேன்: மகேஷ் சேனநாயக்க!

0
45
2010ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து, தான் கைது செய்யப்படும் சூழல் உருவாகியதையடுத்தே நாட்டை விட்டு வெளியேறியதாக தெரிவித்துள்ளார் முன்னாள் இராணுவத்தளபதியும், தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளருமான ஜெனரல் மகேஷ் சேனநாயக்க.
2010 ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டிருந்தார். எங்கள் பணி இனிமேல் தேவையில்லையென, நான் உட்பட 14 இராணுவ தளபதிகளை பணியிலிருந்து நீக்கியிருந்தார்கள். அதன்பின்னர், நான் கைது செய்யப்படவுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து நாட்டை விட்டு அமெரிக்காவிற்கு சென்றேன்.
அங்கு விமான நிறுவனமொன்றில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். 2015 ஆட்சி மாற்றத்தின் பின்னர், இராணுவத்தளபதி பதவியை ஏற்கும்படி எனக்கு அழைப்பு வந்தது. அதை ஏற்றுக்கொண்டேன்.
நான் ஜனாதிபதியானால் சுயாதீனமாகவே செயற்படுவேன். எமது தேர்தல் விஞஞாபனம் அடுத்த வாரம் வெளியிடப்படும்“ என்றார்.