சுதந்திரமான அர்த்தமுள்ள சமூக முறைமையை நல்லாட்சியில் உருவாக்கினோம்! ரணில்

0
44

கடந்த 5 வருடங்களில் வெளிப்படை தன்மையான நிர்வாகத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பு நடவடிக்கைகளை தொடர்ந்தும் உறுதிப்படுத்தி முன்னெடுத்துச் செல்வதற்காக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை வெற்றி பெற செய்யுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார்.

இந்த தேர்தலுக்கு பின்னர் நடைபெறும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெரும்பான்மை பலத்தை பெற்று தருமாறும், அதனை பயன்படுத்தி அரசியலமைப்பு உட்பட அனைத்து மறுசீரமைப்புகளை மேற்கொண்டு இலங்கையை ஆசியாவில் உயர்ந்த, சிறந்த நாடாக மாற்ற தான் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

சிவில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்க கூட்டமைப்பு இணைந்து ஒழுங்கு செய்த மாநாட்டில் இன்று உரையாற்றும் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.

மனித உயிர்களை பாதுகாத்து, சுதந்திரமான அர்த்தமுள்ள சமூக முறைமையை நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் உருவாக்கினோம். அரசாங்கம் எவருடைய உயிர்களை அழிக்கவில்லை. அனைவரது உயிர்களை பாதுகாத்தது.

ஊடக சுதந்திரம், நீதித்துறையின் நடுநிலைமை உறுதிப்படுத்தப்பட்டது எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டள்ளார்.

அதேவேளை சுதந்திரம் இல்லாத யுகத்திற்கு நாட்டை மீண்டும் கொண்டு செல்ல இடமளிக்க முடியாது என இந்த மாநாட்டில் உரையாற்றிய ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவிரத்துள்ளார்.

வெற்றி கொள்ளப்பட்ட சுதந்திரத்தை உறுதிப்படுத்தவும் அதனை வலுப்படுத்தவும் ஐக்கிய தேசிய முன்னணி அர்ப்பணிப்புடன் உள்ளது.

ஆரம்பிக்கப்பட்ட மறுசீரமைப்பு செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வது தனது நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.