வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழப்பு

0
59

குடும்ப தகராறு காரணமாக தீயில் எரிந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் இன்று உயிரிழந்துள்ளார்.

வவுனியா – கற்பகபுரம் பகுதியில் கடந்த 07ஆம் திகதி மாலை குடும்ப தகராறு காரணமாக குறித்த பெண் தீயில் எரிந்த நிலையிலும், ஆண் ஒருவர் தலையில் பலமாக தாக்கப்பட்ட நிலையிலும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

விபத்து பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அந்நபர் அங்கிருந்து வெளியேறி மூன்றாவது மாடியில் உள்ள மலசலக்கூடத்திற்கு சென்று தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.

இதனை அவதானித்த வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து அவரை காப்பாற்றியுள்ளனர்.

இந்நிலையில் தீயில் எரிந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த இவரது மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர் 34 வயதுடைய நிதர்சன் தர்சினி எனத் தெரியவருகின்றது.

இவரது கணவன் 27 வயதுடைய சி.நிதர்சன் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.