ஸ்ரீ ல.சு.க.யின் ஆதரவு கோட்டாபயவுக்கு

0
36

ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிரான முற்போக்கு சக்திகளுடன் சேர்ந்து பயணிப்பதென ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

நேற்றிரவு ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் இடம்பெற்ற ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

தீர்மானம் எடுக்க முடியாமல் சிக்கலை ஏற்படுத்தியுள்ள இடம் எது என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த தயாசிறி எம்.பி.,

எந்தவொரு இடத்திலும் சிக்கலில்லை. இப்போது எல்லாம் சரி செய்யப்பட்டுள்ளது. இன்று ஜனாதிபதி தீர்மானத்தை அறிவிப்பார். ஐக்கிய தேசியக் கட்சியுடன் எந்தவொரு தொடர்பும் இல்லை. இதற்குக் காரணம், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் தொடர்ந்தும் பிரதமராக இருக்கும் ஒரு இடத்துக்கு ஒத்துழைப்பு வழங்க எந்தவித தேவையும் இல்லை என்பதாகும்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து எம்.பி.க்களும் இந்த முடிவில்தான் உள்ளனர். ஜனாதிபதி இதனை இன்று அறிவிப்பார் எனவும் அவர் மேலும் கூறினார்.