பதவியேற்று 24 மணி நேரத்துக்குள் ஆரம்பிப்பேன்

0
67

தான் ஜனாதிபதியாக வந்து 24 மணி நேரத்துக்குள் நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத் திட்டங்களை ஆரம்பிப்பதாக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நேற்று மாலை ராமங்ஞா பீட மகாநாயக்கரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

நவம்பர் 16 ஆம் திகதி ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதன் பின்னர் அடுத்த 24 மணி நேரத்துக்குள் பல்வேறு துறைகளுக்குமான ஜனாதிபதி செயலணிகளை உருவாக்குவோம். பாதுகாப்புத் துறையினரின் சம்பள முரண்பாடு, பதவி உயர்கள் அனைத்துக்கும் மிக விரைவில் தீர்வை முன்வைப்போம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.