இசையை விட மாட்டேன்: ஸ்ருதி

0
55

கடந்த சில ஆண்டுகளாக, சினிமாவில் தலைகாட்டாமல் ஒதுங்கியிருந்த நடிகை ஸ்ருதிஹாசன், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில், ஏராளமான இசை நிகழ்ச்சிகளை, வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார். இன்னும் ஏராளமான இசை நிகழ்ச்சிகள் இருக்கின்றன. எல்லாமே வெளிநாடுகளில் தான் நடக்கவுள்ளன.

சற்று இடைவெளிக்கு பின், இந்தியில் ஒரு படத்திலும், தமிழில், நடிகர் விஜய் சேதுபதியுடன் லாபம் என்ற படத்திலும் நடிக்க உள்ளார். மேலும், அமெரிக்கா டிவி சானலில், டிரெட்ஸ்டோன் என்ற, சீரியலிலும் நடித்து வருகிறார்.