ஜனாதிபதி வேட்பாளர்களிடம் சபாநாயகர் விசேட வேண்டுகோள்

0
62

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் சபாநாயகர் கரு ஜயசூரிய விசேட வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் சூழல் மீதான தங்களது அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதற்கான சிறந்த வழி, பொலிதீன், பிளாஸ்டிக், பட்டாசுகள் மற்றும் பாரிய பதாகைகளை தவிர்த்து சூழல் நேய கொள்கையொன்றை கடைபிடிப்பதன் மூலம் முன்னுதாரணமாக திகழ்வதாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

சபாநாயகரின் உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த செய்தி பதிவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.