கிழக்கு ஆப்கானில் பஸ் மீது குண்டு தாக்குதல்

0
53

கிழக்கு ஆப்கானிஸ்தானில் பஸ் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் குழந்தையொன்று உட்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் இந்த விபத்தில் மேலும் 37 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஜலாலாபாத்தில் இராணுவ பணியாளர்களை ஏற்றிச் சென்ற பஸ் மீதே இவ்வாறு வெடி குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இராணுவ பணியாளர்களை ஏற்றிச் சென்ற பஸ் கடந்து செல்லும்போது மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு ஒன்று வெடித்து சிதறியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.