துருக்கியின் பொருளாதாரத்தை அழித்துவிடுவேன் – டிரம்ப்

0
57

சிரியாவிற்குள் ஊடுருவது தொடர்பில் துருக்கி அளவுக்குமீறிய நடவடிக்கைகளில் ஈடுபட்டால் துருக்கியின் பொருளாதாரத்தை முற்றாக அழித்துவிடுவேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

சிரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள குர்திஸ் போராளிகளிற்கு எதிராக துருக்கி இராணுவநடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்ததை தொடர்ந்து அப்பகுதியிலிருந்த தனது படைகளை விலக்கிக்கொள்ளப்போவதாக டிரம்ப் முன்னதாக அறிவித்திருந்தார்,

அமெரிக்க ஜனாதிபதியின் இந்த அறிவிப்பிற்கு கடும் கண்டனங்கள் வெளியாகியிருந்தன.

அமெரிக்கா குர்திஸ் ஆயுத குழுக்களை கைவிடுவதாகவும் குற்றச்சாட்டுகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையிலேயே டிரம்ப் புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

துருக்கி எல்லை மீறிய நடவடிக்கைகளில ஈடுபடுகின்றது என நான் எனது பெரிய ஒப்பிட முடியாத ஞானத்தின் மூலம் நான் கருதினால் முன்னரை போன்று துருக்கியின் பொருளாதாரத்தை முற்றாக அழித்துவிடுவேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மத்திய கிழக்கில் உள்ள நாடுகள் குறிப்பாக செல்வந்த நாடுகள் தங்களை தாங்களே பாதுகாக்கவேண்டிய தருணம்வந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.