இலங்கை வசமான நேற்றைய போட்டி !

0
58

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நேற்று (07) லாஹூர் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ரி-20 போட்டியிலும் இலங்கை அணியே வெற்றி பெற்றுக் கொண்டது.

நேற்றைய போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்று, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ஒட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 19 ஒவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 147 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.

இதனால் இலங்கை அணி 36 ஒட்டங்களால் இரண்டாவது ரி-20 போட்டியையும் வெற்றிக் கொண்டு தொடரை கைப்பற்றியுள்ளது.