போலீசாரை குறிவைத்து வீசப்பட்ட பெட்ரோல் குண்டு

0
63

ஹாங்காங் போராட்டத்தின் போது செய்தியாளர் மீது தீப்பற்றி எரிந்த காட்சிகள் வெளியாகியுள்ளன.

மாஸ்க் அணிந்து போராடுபவர்களை கைது செய்து ஓராண்டு வரை சிறை வைக்கும் காலனி ஆதிக்க காலத்திய அவசர சட்டங்களைக் கைவிட வலியுறுத்தி நேற்று ஹாங்காங்கில் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.

போராட்டங்களில் வன்முறை வெடித்ததில், போலீசார் அவர்களை கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்தனர். இதற்கு பதிலடியாக போலீசார் மீது மாக்டெய்ல் பாட்டில்களில் தீயைப் பற்ற வைத்து போராட்டக்காரர்கள் வீசினர். இதில் செய்தியாளர் ஒருவர் மீது திடீரென தீப்பற்றியதில், அவரது கழுத்தில் தீக்காயம் ஏற்பட்டது.

முகமூடி அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மிளகு ஸ்பிரே அடித்து, தரையில் கிடத்தி, கைகளை முதுகுப்புறம் வைத்து விலங்கு பூட்டி போலீசார் கைது செய்தனர்.