பேனருக்கு பதில் தையல் மிஷின் வழங்கிய தனுஷ் ரசிகர்கள்

0
88

வடசென்னை படத்தை தொடர்ந்து, நடிகர் தனுஷ், வெற்றிமாறன் கூட்டணியில் வெளியாகி உள்ள படம் அசுரன். இந்த படத்தில், நடிகர் தனுஷ் ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார்.

எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில், பசுபதி, கருணாஸ் மகன் கென், பாலாஜி சக்திவேல், அம்மு அபிராமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

வழக்கமாக, படம் ரிலீசாகும் நாளில், நடிகர் தனுஷ் ரசிகர்களும் மற்ற நடிகர்களின் ரசிகர்கள் போல, நடிகர் தனுஷுக்கு பேனர், கட்-அவுட் வைத்து கொண்டாடுவர். சுபஸ்ரீ மரணத்திற்கு பின் பல நடிகர்களின் ரசிகர்கள் பேனர், கட்-அவுட் வைப்பதை தவிர்த்து வருகின்றனர். தனுஷ் ரசிகர்களும் தவிர்த்துள்ளனர்.

அசுரன் படம் ரிலீஸின் போது திரையரங்குகளில் கட் அவுட், பேனர்களுக்கு பதிலாக, திருநங்கைகளுக்கு இலவசமாக தையல் மிஷின் வாங்கிக் கொடுத்து உதவியிருக்கின்றனர். இதற்காக, தன்னுடைய ரசிகர்கள் நடிகர் தனுஷ் பாராட்டி இருக்கிறார்.