விஜய் படத்தில் இணைந்த ஆடை இயக்குநர்

0
64

விஜய்யின் 64வது படத்தை ‛மாநகரம், கைதி’ படங்களின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு, ஆண்டனி வர்கீஸ் ஆகியோர் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் படத்தின் பூஜை நடந்தது.

இந்நிலையில், இப்படத்தில், ஆடை பட இயக்குனர் ரத்ன குமாரும் இணைந்துள்ளார். இதுகுறித்து, அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: ‛‛நடிகர் விஜய் படத்தில் நானா… என்னால் நம்ப முடியவில்லை. என் நண்பன் லோகேஷ் கனராஜுடனும் இணைந்து, திரைக்கதை அமைப்பது மகிழ்ச்சியாக உள்ளது. படக்குழுவுக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.