தகுதித்தேர்வில் தோல்வியடைந்த ஆசிரியர்களுக்கு பயிற்சி தரப்படும் – அமைச்சர்

0
58

ஆசிரியர் தகுதித்தேர்வில் தோல்வியடைந்த ஆசிரியர்களுக்கு 10 நாட்கள்  சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களின் பணி பாதுகாப்பினை அரசு உறுதி செய்யும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தனம் மைதானத்தில் பள்ளி மாணவர்களுக்கு இடையே 10 ஆவது தேசிய கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, பீகார், உத்தராகண்ட் உள்ளிட்ட 6 மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.

வெற்றி பெற்ற அணிகளுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர்  செங்கோட்டையன் பரிசுகள் வழங்கி பாராட்டினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாணவர்களை சிறந்த விளையாட்டு வீரர்களாய் மாற்ற தேவையான நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது என்று தெரிவித்தார். மேலும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தோல்வியடைந்த ஆசிரியர்களுக்கு 10 நாட்கள்  சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு ஆசியர்களின் பணி பாதுகாப்பினை அரசு உறுதி செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார்.