நீட் தேர்வு ஆள்மாறாட்டம் – 15 நாள் நீதிமன்ற காவல்

0
101

நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கில் மாணவர் ராகுல் மற்றும் அவரது தந்தை டேவிஸ்க்கு 15 நாள் நீதிமன்ற காவல் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  தேனி மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மாணவர் ராகுல், தந்தை டேவிஸை சிபிசிஐடி போலீஸ் ஆஜர் படுத்தியது. நீதிமன்ற உத்தரவை அடுத்து இருவரும் தேனி மாவட்ட சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.