கணவரை கொலை செய்து இரண்டு நாட்களுக்கு பின் சடலத்தை எரித்த மனைவி!!

0
80

கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை கொலை செய்து இரண்டு நாட்களுக்கு பின் சடலத்தை எரித்த மனைவியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வார் மாவட்டத்தை சேர்ந்தவர் குல்தீப் யாதவ்(24). இவர் கடந்த 6 வருடங்களுக்கு முன்பாக நிஷா என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார்.

கணவன் – மனைவிக்கு இடையே கடந்த சில தினங்களுக்கு முன்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவருடைய மனைவி குல்தீப்பை கொலை செய்து அவருடைய சடலத்தை படுக்கை பெட்டிக்குள் மறைத்து வைத்திருந்துள்ளார்.

அன்றைய தினமே கணவர் காணாமல் போய்விட்டதாக நாடகமாடியுள்ளார். உறவினர்களுடன் சேர்ந்து தேடிவிட்டு இரண்டு நாட்களுக்கு பின் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

இதற்கிடையில் படுக்கை பெட்டிக்குள் இருந்த சடலம் துர்நாற்றம் வீசியதால், அறைக்கு தீவைத்து சடலத்தையும் சேர்த்து எரித்துள்ளார்.

பின்னர் எரிந்து நாசமான குப்பைகளை பண்ணை தோட்டத்தில் வீசிவிட்டு வருமாறு மகனிடம் கொடுத்து அனுப்பியுள்ளார். அங்கு சென்ற மகன் குப்பையை வீசியபோது உள்ளே முடி மற்றும் மண்டை ஓடு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளான்.

இதுகுறித்து உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் பொலிஸார் விசாரணை மேற்கொண்ட போது, நிஷா கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இந்த நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.