மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் முக்கிய தீர்மானம்!

0
50

நடைபெறவுள்ள கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் தனித்துப் போட்டியிட தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த தகவலை மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவரான தேவே கவுடா தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், கர்நாடகா சட்டசபை இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 15 தொகுதிகளிலும் குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தனித்துப் போட்டியிடவுள்ளது என அறிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மற்றும் அரியானா ஆகிய மாநிலங்களுக்கு அக்டோபர் 21ஆம் திகதி ஒரேகட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும், 17 மாநிலங்களில் உள்ள 63 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் காலியாக உள்ள ஒரு தொகுதி என மொத்தம் 64 தொகுதிகளுக்கு அதே திகதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.