2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண இறுதி போட்டி இன்றைய தினம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இடம்பெற்று வருகின்றன.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 100 ரன்களை எட்டுவதற்குள்ளாக 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதனையடுத்து கோலி – லோகேஷ் ராகுல் ஜோடி நிதனமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் கோலி 54 ஓட்டங்கள் இருக்கும் போது ஆட்டமிழந்தார்.
இதன்பின்னர் ஒரு புறம் மற்ற வீரர்கள் ஆட்டமிழக்க கே.எல் ராகுல் பெறுப்பாக விளையாடி 66 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து, இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 240 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
அவுஸ்திரேலியா அணி சார்பில் பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுக்களையும், பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினார்.
இதற்கமைய, அவுஸ்திரேலிய அணிக்கு 241 என்ற ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.