யாழ் – இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டத்தரிப்பு – வடலியடைப்பு பகுதியில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று நேற்றிரவு (17.11.2023) களவாடப்பட்டுள்ளது.
பல்சர் 150 ரக மோட்டார் சைக்கிளை உரிமையாளர் வீட்டில் நிறுத்தி வைத்துவிட்டு திறப்பினை கழற்றாமல் விட்டுள்ளார்.
இதன்போது மோட்டார் சைக்கிள் களவாடப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இச்சம்பவம் குறித்து இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இளவாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.