தென்னிந்தியாவில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ்.
தற்போது இந்த நிகழ்ச்சியின் 7 சீசன் ஒளிபரப்பாகி கொண்டிருக்கின்றன.
இவ்வாறான நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையென சக போட்டியாளர்கள் கூறியதால் போட்டியாளர் பிரதீப் ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டார்.
இச்சம்பவம் பிக்பாஸ் பார்வையாளர்களுக்கிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சமூக வலைதளத்திலும் தங்களது கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.
இதனையடுத்து, நேற்றைய தினம் பிக்பாஸ் வீட்டிலிருந்து போட்டியாளர் ஐஷூ வெளியேறினார். இவர் தன்னுடைய பெற்றோரின் வேண்டுகோளுக்கிணங்கவே வீட்டை விட்டு வெளியேறியதாககூறப்படுகின்றது.
திறமையான பெண்ணான ஐஷூ வெளியேறியதற்கு முக்கிய காரணம், நிக்ஸன் – ஐஷூ இடையேயான உறவு தான். அது நட்பா, காதலா என வீட்டில் இருப்பவர்களே குழம்பி போனார்கள்.
இருவரும் கண்ணாடி முன் நின்று முத்தமிட்டுக்கொண்டது, இரட்டை அர்த்தத்தில் பேசியது வரை பார்வையாளர்கள் இருவரின் செயல்பாடுகளையும் கண்டித்தனர்.
இதையடுத்து, அவருக்கு மக்களின் ஆதரவு இல்லாததால் அவர் எவிக்ஷனில் வெளியேற்றப்பட்டார்.
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் 42 நாட்கள் இருந்த ஐஷூ வாங்கி உள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதில் ஐஷூவிற்கு ஒரு நாளைக்கு ரூ.20 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதன்படி, GST போக, சுமார் 8 லட்ச ரூபாய் அவருக்கு சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
மேலும் குறித்தசெய்தியை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ரொமான்ஸ் பண்ணதுக்கு இவ்வளவு சம்பளமா என கேலியாக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.