ஓய்ந்தது கிளிநொச்சியின் ஊடகக்குரல்.சிவஞானம் சிறீதரன் இரங்கல்!
கிளிநொச்சியின் ஊடகப் பரப்பில் தனக்கெனத் தனியிடம் பிடித்திருந்த அன்புத்தம்பி நிற்சிங்கம் நிபோஜனின் திடீர் மரணம் எம் எல்லோருக்கும் தீராப்பெருவலியைத் தந்திருக்கிறது.
மிகச்சொற்ப வயதில், தன்முனைப்பாலும், ஊடகத்துறை மீதான அதீத ஆர்வத்தாலும் அத்துறையின் ஆழ அகலங்களையெல்லாம் அறிந்த ஒருவனாக தன்னைத்தானே தகவமைத்துக்கொண்ட தம்பி நிபோஜன், இத்தனை அகாலத்தில் எமைப்பிரிவான் என நாம் யாரும் நினைத்தேனும் பார்த்ததில்லை. ஓரிரு மணிநேரங்களின் முன்னர் என்னோடு தொலைபேசியில் உரையாடிய அந்தக் குரலொலி மறையும் முன்னரே அவனது உயிரும் பிரிந்திருக்கிறது. அண்மைக்காலமாக எமைச் சார்ந்தவர்களிடையே நிகழ்ந்தேறும் ஏற்கவே முடியாத இளவயது மரணங்களின் நீட்சியில் இணைந்துகொண்ட தம்பி நிபோஜனின் ஆத்மா அமைதிபெறட்டும். சிவஞானம் சிறீதரன் பாராளுமன்ற உறுப்பினர், யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம், கிளிநொச்சி.