பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் எல்லைகளை பிரிக்கும் வனப்பகுதியுடன் கூடிய மலை உச்சியில் உள்ள லா குரே கிராமத்தில் Arbez Franco-Suisse – L’Arbézie என்ற விடுதி அமைந்துள்ளது.
இந்த இடமும் விடுதியும் ஐரோப்பாவில் மிகவும் பிரபலமானது என்பதுடன் கிராம பாணியில் அமைக்கப்பட்டுள்ள விடுதியை ஒரு குடும்பம் நடத்தி வருகிறது.
இரண்டு நாடுகளின் எல்லைகள் தொடர்பான உடன்படிக்கைக்கு அமைய வர்த்தக இலாபத்தை அடிப்படையாக கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விடுதியின் ஒரு பகுதி சுவிட்சர்லாந்து எல்லையிலும் மற்றைய பகுதி பிரான்ஸ் எல்லையிலும் அமைந்துள்ளது.
இதன் காரணமாக இந்த சர்வதேச எல்லையில் அமைந்துள்ள விடுதியின் இரண்டு எல்லைகளில் இருக்கும் கட்டடத்தில் இரண்டு உணவகங்கள் மற்றும் அறைகளை கொண்ட விடுதிகள் உள்ளன.