தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு இணையாக வளர்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது பல படங்களில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் தன் முதல் மகள் ஆராதனாவை கனா படத்தில் ஒரு பாடலில் குட்டி குழந்தையாக இருக்கும் போது பாட வைத்துள்ளார்.
வாயாடி பெத்த பிள்ள என்ற பாடலை அழகாக தன் தந்தையுடன் பாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வந்தார். தற்போது 8 வயதாகிய ஆராதனா சமீபத்தில் நடந்து முடிந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பாடி அனைவரது கவானைத்தையும் ஈர்த்துள்ளார்.
ஆள் அடையாளம் தெரியாமல் இப்படி வளர்ந்துட்டாரே என்று சிவாகர்த்திகேயன் மகளை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள். தற்போது அவரது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.