நபர் ஒருவர் தனது வருங்கால மனைவிக்கு சில கண்டிஷனுடன் ஒப்பந்தம் போட்டு திருமணம் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நம் அனைவரின் வாழ்விலும் மறக்க முடியாத நிகழ்வுகளுள் ஒன்று திருமணம். அதை ஞாபகப்படுத்தும் வகையில் நாம் நிறைய புகைப்படங்கள் எடுப்பது வழக்கம்.
திருமணத்திற்கு ஜாதகம், பொருத்தம் என பார்த்து பல சடங்குகளை செய்வதையும் நாம் அவதானித்திருப்போம். ஆனால் இங்கு மாப்பிள்ளை மணப்பெண்ணிற்கு சில கண்டிஷனை போட்டு திருமணம் செய்துள்ளார்.
- மனைவி தினமும் சேலை மட்டுமே கட்ட வேண்டும்.
- கணவர் இல்லாமல் இரவு நேரங்களில் பார்ட்டிக்கு செல்ல கூடாது.
- ஞாயிறு அன்று காலை உணவுகளை கணவர் மட்டுமே சமைக்க வேண்டும்.
- வீட்டு உணவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உணவகங்களில் உணவுகள் சாப்பிடுவதை தவிர்ப்பது.
- மாதத்திற்கு ஒரு நாள் மட்டும் பீட்சா போன்ற உணவுகளை சாப்பிடுவது.
- 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே ஷாப்பிங் செல்வது.
- தினமும் காலையில் ஜிம் செல்வது மற்றும் பார்ட்டிகளுக்கு செல்லும்போது நிறைய புகைப்படங்கள் எடுப்பது போன்ற பல நிபந்தனைகள் இடம் பெற்றிருந்தது.
இந்த திருமண நிகழ்வின் முடிவில் மணமகன் மணப்பெண்ணின் பாதங்களைத் தொட்டு வணங்கியுள்ளாராம்.
மணப்பெண்ணுக்கு அன்றாட வாழ்வில் கடைபிடிக்க சிரமமான பல கட்டுப்பாடுகளை விதித்து விட்டு, ஒரே ஒரு நாள் காலில் விழுந்து வணங்குவதால் எல்லாம் சரி என்று ஆகி விடுமா என பெண்ணியம் பேசும் சிலர் கொந்தளித்து வருகின்றனர்.