நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்பி பிழைத்த பிரித்தானிய பிரதமர்!
பிரிட்டிஷ் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தமது ஆளும் கன்சர்வெடிவ் கட்சி ஆரம்பித்த நம்பிக்கைத் தீர்மான வாக்கெடுப்பில் வெற்றிபெற்றிருக்கிறார்.
அவர் தொடர்ந்து அந்தக் கட்சியின் தலைவராக இருப்பார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்திருந்தால் ஜோன்சன் கட்சித் தலைவர் பொறுப்பையும் பிரதமர் பதவியையும் இழந்திருப்பார்.
நாட்டில் திடீர்த் தேர்தல் நடத்தும் திட்டம் எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் 2020-21க்கு இடைப்பட்ட காலத்தில் COVID-19 முடக்கநிலை நடப்பில் இருந்தது. அப்போது உயிரிழந்தோரின் இறுதிச் சடங்கில்கூடப் பங்கேற்கப் பொது மக்களுக்கு அனுமதி இல்லாமல் இருந்தது.
அவ்வேளையில் பிரதமரின் டவ்னிங் ஸ்ட்ரீட் அலுவலகம், அதன் தோட்டப்பகுதிகள், மற்ற அரசாங்க அலுவலகங்களில் பல விருந்து நிகழ்ச்சிகள் நடந்ததாகக் கூறப்படுகிறது.
அவற்றில் குறைந்தது மூன்று விருந்து நிகழ்ச்சிகளில் பிரதமர் ஜோன்சன் கலந்து கொண்டதாக வந்த செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியது.