பிரான்ஸில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மொத்தம் 874 கார்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2019-ஆம் ஆண்டில் மொத்தம் 1,316 கார்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதாகவும் அதனுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு இவ்வாறான சம்பவங்கள் குறைந்துள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டினர்.
பெருமளவான தீவைப்பு முயற்சிகள் பொலிஸாரால் இவ்வாண்டு தடுத்து நிறுத்தப்பட்டன.
2005-இல் பல நகரங்களில் நடந்த புத்தாண்டு கலவரத்தை தொடர்ந்து இக்காலப்பகுதியில் கார் எரிப்பு என்பது பிரெஞ்சு புறநகர்ப் பகுதிகளில் ஆண்டு தோறும் நடக்கும் நிகழ்வாக மாறியுள்ளது.
இந்நிலையில் இவ்வாறான சம்பவங்களைத் தடுக்க கடந்த புத்தாண்டு கொண்டாட்ட காலப்பகுதியில் சுமார் 32,000 தீயணைப்பு வீரர்கள், 95,000 பொலிஸார் குவிக்கப்பட்டனர்.
இவ்வாறான கடுமையான கட்டுப்பாடுகளையும் மீறி கடந்த 31-ஆம் திகதி இரவு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது 874 கார்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.