தொலைபேசி அழைப்பு எடுத்த பிரதமருக்கு விக்னேஸ்வரன் கொடுத்த பதில்

0
76

நாடாளுமன்ற உறுப்பினர் க.வி. விக்னேஸ்வரனுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ். மாவட்ட எம்.பி.யுமான க.வி.விக்னேஸ்வரனுக்கு 81 ஆவது பிறந்த தினம் இன்றாகும்.

இதனையடுத்து இன்று நண்பகல் தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, அவருக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது இருவரும் பொதுவான விடயங்களை பேசிக்கொண்டபோதிலும், அரசியல் விவகாரங்கள் பேசப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, “பொதுமக்கள் தொடர்பாடலில் இலங்கையில் நீங்கள்தான் முதலாவது இடத்தில் இருக்கின்றீர்கள்” என விக்னேஸ்வரன் இதன்போது பிரதமரிடம் தெரிவித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.