விக்கிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்த பிரதமர்

0
37

நேற்று (23) 81 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடிய தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரனுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

இருவரும் பொதுவான விடயங்களையிட்டுப் பேசிக்கொண்ட போதிலும் அரசியல் விவகாரங்கள் பேசப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் பொதுமக்கள் தொடர்பாடலில் நீங்கள்தான் முதலாவது இடத்தில் இருக்கின்றீர்கள் என விக்கினேஸ்வரன் இதன் போது பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.